"உனக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒன்னா..?" - லாஸ்லியாவின் கேப்டன்ஸியை கலாய்த்த சாண்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 10, 2019 12:37 PM
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் வனிதா விட்டுக் கொடுத்ததன் பேரில் இந்த வார கேப்டனாக லாஸ்லியா தேர்வானார். இதனிடையே, சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் அமர்ந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட எமோஷனல் செக்மெண்ட்டான Freeze டாஸ்க் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றன. அதில், முகென் ராவின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை உணர்ச்சிவசப்படுத்தினர். இதனை சீக்ரெட் ரூமில் இருந்த சேரனும் பார்த்து கண்கலங்கினார்.
அதைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோ வீடியோவில், இந்த சீசனில் கார்டன் ஏரியா, பெட்ரூம், கிச்சன் ஆகிய இடங்களை தவிர மிகவும் பிரபலமான சிவப்பு கதவு அருகே காபி குடிக்கையில் லாஸ்லியா மற்றும் சாண்டி இடையே கடுமையான விவாதம் எழுந்தது.
அப்போது பேசுகையில், நீங்க கேப்டனா இருக்கும் போது மட்டும் காபி குடிச்சதும் எழுந்து வந்து வேலை பாக்க சொல்றீங்க.. நீங்க ஒரு நாள் கூட இப்படி இருந்தது இல்லையே என சாண்டி கூற, எல்லாரும் வேலை பார்க்கணும்னு சொன்னதால் மட்டும் தான் வர சொன்னேன் என லாஸ்லியா கடுப்பாகி இடத்தை காலி செய்தார்.
லாஸ்லியாவை வெறுப்பேதினா அண்ணனா இருந்தாலும் சும்மா விட மாட்டேன் என்ற ரேஞ்சில், ஜாலி ஜாலின்னு நீ டபால்ன்னு அவள ஹர்ட் பண்ணிடுறன்னு சாண்டியை கெஏள்வி கேட்டார் கவின்.
"உனக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒன்னா..?" - லாஸ்லியாவின் கேப்டன்ஸியை கலாய்த்த சாண்டி வீடியோ