''பணத்துக்காகவா உன்ன அனுப்புச்சேன்'' - லாஸ்லியாவிடம் அவரது அப்பா வேதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் (September 10) முகேனின் அம்மாவும் தங்கையும் அவரை காண உள்ளே வந்தனர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட முகேன் அவரது அம்மாவை தூக்கி சுத்தினார். அது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Losliya, Cheran, Vanitha, Kavin, Bigg Boss 3 Sept 11 Episode

அதனைத் தொடர்ந்து இன்று விஜய் டிவி ஒளிபரப்பிய புரோமோ வீடியோக்களில் லாஸ்லியாவின் அப்பா உள்ளே வருகிறார். பின்னர் லாஸ்லியாவிடம் இதற்காகவா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாய் என்று கோவமாக கேட்கிறார். பின்னால் நின்று கொண்டிருக்கும் கவின் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

இது லாஸ்லியாவின் அப்பா கவினை என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் படி இன்றைய நிகழ்ச்சியில் முதலில்  லாஸ்லியாவின் அம்மாவும் இரண்டு தங்கைகளும் உள்ளே வருகின்றனர். பின்னர் அவரது அப்பா உள்ளே வருகிறார். அவரை பார்த்ததும் லாஸ்லியா கதறி அழுகிறார். 'முதலில் என்கிட்ட பேசாதே' என்ற அவர், பின் லாஸ்லியாவிற்கு அட்வைஸ் செய்கிறார்.

அப்போது பேசும அவர், கல்யாணம் செஞ்சு வைக்கவா போறீங்க என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். எனக்கு எப்படி இருக்கும். எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும். எனக்கு முன்னாடியே அப்படி பேசுறாங்கனா, நாங்க போனதுக்கு அப்புறம் எப்படி பேசுவாங்க. பணத்துக்காகவா உன்னை அனுப்பி வச்சோம்.பணம்லா முக்கியம் இல்ல. என்கிட்ட என்ன சொன்ன ? கெத்தா போய், கெத்தா வருவேனு சொன்னேல்ல,  கெத்தா வா. என் பிள்ளைய பத்தி எனக்கு தெரியும்   என்கிறார்.