'இந்த வாரம் பிக்பாஸிலிருந்து யார் எலிமினேட் ஆவாங்க?' - சீரியல் நடிகை கணிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 11, 2019 01:01 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு முன்பே சீக்ரெட் ரூம் அறிமுகப்படுத்தப்பட்டது. கஸ்தூரி வெளியேறும் போது கூட சீக்ரெட் ரூமிற்கு செல்கிறீர்களா ? என்று கேட்கப்பட்டது. அதனை கஸ்தூரி மறுத்தார்.

கடந்த வாரம் சேரன் சீக்ரெட் ரூமிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து லாஸ்லியா - கவின் உரையாடல் குறித்து கேள்வி எழுப்பினார். தற்போது வெளியான முதல் புரோமோ வீடியோவில் மீண்டும் சேரன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது காட்டப்பட்டது.
இந்நிலையில் பிரபல டிவி சீரியல் நடிகையும் நடிகர் சஞ்சீவின் மனைவியுமான ப்ரீத்தி பிக்பாஸ் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரிடம் இந்த வாரம் யாரு எவிக்ட் ஆவாங்கனு நினைக்கிறீங்க என்று தொகுப்பாளர் தாரா கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து ஷெரின் தான் வெளியேறுவார் என்று நினைத்தேன். ஷெரினுடைய அம்மா வந்திருந்தாங்க. சேரன் சார் எலிமினேட் ஆகுற எடத்துல ஷெரின் அம்மா ஏன் வரணும்?
அதனால இந்த வாரம் வனிதாவுடைய தட்டி கேட்குற கேரக்டர் வேணும்னு பிக்பாஸ் நினச்சாங்கனா வனிதா போகமாட்டாங்க. ஆனா வனிதாவோட Efforts போதும்னு நினச்சாங்கனா எலிமினேட் ஆய்டுவாங்க'' என்றார்.