"ஆட்டம் ஆரம்பம் Baby.. என் Support உனக்கு தாண்டா..!”- முகென் பற்றி பிக் பாஸ் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 10, 2019 07:04 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஆடியன்ஸை கவர்ந்தது நட்பும், அதையும் தாண்டி புனிதமான உறவும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் இந்த சீசனில் சாக்ஷி, கவின், லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதலும், நட்பும், முகென் ராவ் மற்றும் அபிராமி இடையிலான நட்பையும் தாண்டிய புனிதமான உறவும் ஹைலைட்டாக அமைந்தது. பிக் பாஸ் வீட்டில் முகென் ராவிடம் நெருக்கம் காட்டிய அபிராமி அவரை ஒருதலையாக காதலிப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
இந்த ஒருதலை காதலினால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், சமாதானம் ஆகிவிடும் இந்த புனிதமான உறவில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே வந்த வனிதா பிரலயத்தை உண்டாக்கினார். அதன் விளைவாக அபிராமி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
சமீபத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்று திரும்பிய அபிராமி, முகென் ராவின் அம்மா மற்றும் தங்கையை நேரில் சந்தித்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், இன்றைக்கு ஒளிபரப்பாகவிருக்கும் எபிசோட் குறித்து அபிராமி ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், மிகவும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. freeze டாஸ்க்கில் முகென், தனது அம்மா மற்றும் தங்கையை தூக்கி சுற்றியதை பார்த்து, ‘இந்த அன்பான உணர்வை காண காத்திருக்கிறேன். என்னோட சூப்பர் ஹீரோ நீ தான்.. என் ஆதரவு எப்போதும் உனக்கு தாண்டா’ என அபிராமி குறிப்பிட்டுள்ளார்.