''எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு கேம் ஆடுங்க'' - கவினுக்கு அட்வைஸ் பண்ணும் லாஸ்லியா அப்பா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று (செப்டம்பர் 11) லாஸ்லியாவின் பெற்றோர்கள் உள்ளே வந்தனர். முதலில் லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் வந்தனர். பின்னர் அவரது அப்பா உள்ளே வந்தார்.

Kavin, Losliya, Cheran, Vanitha, Kamal Haasan Bigg Boss 3 Sept 11 Episode

முதலில் லாஸ்லியாவிடம் பேச மறுத்த அவரது அப்பா, பின்னர் அவருக்கு அட்வைஸ் செய்தார். அவரது அப்பா வேதனைப்படுவதை பார்த்த கவின் அழத் தொடங்கினார். பின்னர் சேரனிடம், 'என்னால தான் சார் இதெல்லாம். எனக்கு அவங்க இவ்ளோ ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியாது' என்றார்.

அப்போது கவினை சேரன் சமாதானப்படுத்தினார். அப்போது அங்கு வரும் லாஸ்லியாவின் அப்பா, 'ஹாய் கவின் இதெல்லாம் கேம். கவலப்பாடதிங்க. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு கேம் ஆடுங்க. வின் பண்ணி வாங்க. எல்லோரும் நண்பரா இருந்துட்டு நண்பராகவே வாங்க. யாரு வின் பண்ணாலும் எங்களுக்கு சந்தோஷம் தான்.  அழாதிங்க, நீங்க ஆம்பளைங்க. கெத்தா இருக்கணும்'' என்கிறார்..

பின் லாஸ்லியாவின் அப்பாவிடம் சேரன், 'கவின் வருத்தப்படுறான், உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு சொன்னான் என்கிறார். அதற்கு லாஸ்லியாவின் அப்பா, 'எதற்கு வருத்தப்படனும். எல்லாம் நடக்கிறது தான என கவினின் கைபிடித்து தன்மையாக பேசுகிறார். இது ஒரு விளையாட்டு உங்க விளையாட்டை வின் பண்ண பாருங்க. உங்க மேலலாம் கோவம் இல்ல'' என்கிறார்.