“Stop பண்ணுவீங்களா...?” - கவினுக்கு கடிதம் எழுதிய சேரப்பா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 10, 2019 04:08 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டுள்ள சேரன், கவினுக்கு எழுதிய கடிதத்தை போட்டியாளர்கள் மத்தியில் தர்ஷன் படித்துக் காட்டும் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். சேரனின் எவிக்ஷன் வனிதா, லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்டோரை அதிரிச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன் சீக்ரெட் ரூமில் அமர்ந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை கவனித்து வருகிறார். நேற்றைய எபிசோடில், வெளியே சென்ற பிறகு காதல் பற்றி பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்த பட்சத்தில், வீட்டிற்குள்ளேயே காதலை கொண்டாட வேண்டும் என கவின் கூறினார்.
இதனை சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் கண்டித்தார், அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தை தர்ஷன் அனைவரின் முன்பும் படித்து காண்பித்தார். அந்த கடிதத்தில், அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன், இருவரும் தங்களது விருப்பங்களை வெளியே வந்து பேசிக் கொள்ளலாம். விளையாட்டில் கனவம் செலுத்தலாம் என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்படியிருக்க, லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல சொல்லி வலியுறுத்துவது நியாயமா? இதை நிறுத்திக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து, அமைதியாக இருந்த கவின், இன்றைய எபிசோடில், சேரனை பற்றி எசக்கு பிசக்காக ஏதாவது பேச வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“STOP பண்ணுவீங்களா...?” - கவினுக்கு கடிதம் எழுதிய சேரப்பா..! வீடியோ