''சேரன் இப்படி பண்ணிருக்கக் கூடாது'' - பிரபல நடிகை குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். அப்போது லாஸ்லியாவிடம் கவின் காதல் குறித்து பேசுவதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டார். மேலும் நாமினேஷன் நிகழ்வுகளையும் அங்கிருந்து வேடிக்கை பார்த்தார்.

Sripriya accusation on Kavin, Losliya, Vanitha, Cheran Bigg Boss 3

நாமினேஷனில் கவின், ஷெரினை தர்ஷன் பற்றி பேசியதாக நாமினேட் செய்தார். பின்னர் சீக்ரெட் ரூமில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அவர், கவின் நாமினேட் செய்ததை ஷெரினிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் கருத்துப்படி சேரன் சார் சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்ததை கண்டிப்பாக சொல்லியிருக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.