'கவின் - லாஸ்லியா காதல் பிரச்சனை அவங்களோட Personal இல்லையா?' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கேள்வி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். அங்கிருந்து மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்தார்.

Kaajal Pasupathi questioned to Cheran, Kavin, Losliya, Vanitha's Bigg Boss 3

அப்போது கவினும் லாஸ்லியாவும் காதல் விவகாரங்கள் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர். அதனை பார்த்த சேரன் அங்கிருந்தபடியே பார்வையாளர்களிடம், இருவரும் காதல் குறித்து பேசமாட்டோம் என்றார்கள். தற்போது லாஸ்லியாவி கவின் அதுகுறித்து பேச Force பன்றான் என்றார்.

மேலும் கடிதம் மூலமும் கவின் - லாஸ்லியா விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், கவின் மற்றும் லாஸ்லியா காதல் பிரச்சனை அவர்களது தனிப்பட்ட விவகாரம் இல்லையா ஆண்டவரே? உங்கள் வார்த்தைகளை எப்படி சேரப்பா மறக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.