நீச்சல் குளத்தில் விழுந்து தத்தளித்த தாய்.. ஓடிவந்து காப்பாற்றிய 10 வயது சிறுவன்.. நெகிழ வைத்த வீடியோ!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 31, 2022 06:53 PM

அமெரிக்கவில் நீரில் மூழ்கும் நிலைக்கு தாய் சென்ற நிலையில், அதன் பின்னர் 10 வயது மகன் செய்த செயல் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

10 year old son saves his mother who suffer in pool

Also Read | "நீங்க வரலைன்னா சோறு மிச்சம்".. Trend ஆகும் திருமண அழைப்பிதழ்.. "சாப்பாடு, Gift பத்துன விஷயத்துக்கே லைக்ஸ அள்ளி போடலாம்"

பொதுவாக, நமக்கு மிக நெருக்கமான நபர்களுக்கு ஏதாவது ஆனால், நமது உயிரைக் கொடுத்து உதவி செய்ய தான் நினைப்போம்.

அப்படி தான், அமெரிக்காவில் ஒரு தாய்க்காக மகன் செய்த உதவி தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி, பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பலரது வீட்டிலேயே நீச்சல் குளம் இருப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள வீடு ஒன்றில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், அவர் எதிர்பாராத விதமாக திடீரென அவருக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் குளத்தில் இப்படி நடந்ததால், அந்த பெண் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டும் இருந்துள்ளார்.

10 year old son saves his mother who suffer in pool

தனது தாயார் குளித்து கொண்டிருந்த சமயத்தில், நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால், உடனடியாக கீழே நின்ற 10 வயது மகன், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். உடனடியாக நீரில் குதித்த சிறுவன் தனது தாயாரை பிடித்த படி படிக்கட்டு அருகே மெல்ல மெல்ல கொண்டு வந்தார். தொடர்ந்து, அங்குள்ள நாய் ஒன்றும் படிக்கட்டு வரை வந்து விட்டது.

இறுதியில், வயதான ஒரு நபர் வந்து விடவே, அவரின் உதவியுடன் தனது தாயை வெளியே கூட்டி வந்துள்ளார் அந்த சிறுவன். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில், அந்த பெண்ணே இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது 10 வயது மகன், தனது உயிரை காப்பாற்றியதாகவும், இல்லை என்றால் தனக்கு ஏதாவது ஆகி இருக்கும் என்றும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

10 year old son saves his mother who suffer in pool

இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சிறிய வயதில் கூட அந்த சிறுவன் தனது தாயை காப்பாற்ற எவ்வளவு முனைப்பு காட்டுகிறான் என்பதையும் குறிப்பிட்டு அதே வேளையில் சிறுவனை பாராட்டியும் வருகின்றனர்.

Also Read | "தரையில என் கால் பட்டாலே மயக்கம் வந்துடும்".. 23 மணி நேரம் படுக்கையில் கழிக்கும் பெண்.. வினோத காரணம்!!

Tags : #SON #SAVES #MOTHER LIFE #POOL #SUFFER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 10 year old son saves his mother who suffer in pool | World News.