"பைக் சாவி'ய குடு".. கேட்ட தந்தை.. மறுத்த மகன்.. கொஞ்ச நேரத்தில் நடந்த பதற வைக்கும் சம்பவம்
முகப்பு > செய்திகள் > இந்தியாபைக் சாவியை மகன் கொடுக்க மறுத்ததால், தந்தை எடுத்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் மோட்டி படேல். இவர் தனது மகனான சந்தோஷ் படேலிடம் பைக்கின் சாவியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மகன் சந்தோஷ் பைக் சாவியை கொடுக்க மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால் மோட்டி அதிகம் கோபம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மகன் சந்தோஷை அடிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சந்தோஷ் மற்றும் மோட்டி இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. நிமிடம் செல்ல செல்ல வாக்குமூலம் இன்னும் தீவிரமான நிலையில், உச்சக் கட்ட கோபத்தில் இருந்த மோட்டி, பயங்கரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தன் அருகே இருந்த ஆயுதம் ஒன்றை வேகமாக எடுத்து வந்த மோட்டி, மகன் சந்தோஷின் கையை கோபத்தில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்திய நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட சந்தோஷை அருகில் இருந்தவர்கள், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் சந்தோஷின் தந்தை மோட்டி படேல், தான் பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டி பட்டியலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் தனது மகன் சந்தோஷை தாக்கிய உறவினர் ஒருவரையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பைக் சாவி கேட்டதன் பெயரில், தந்தை மற்றும் மகன் மோதியதாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையில் வேறு ஏதாவது முன் விரோதம் இருந்ததன் காரணமாக இப்படி அவர்கள் இருவரும் செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பைக் சாவி தர மறுத்த மகனை தந்தை வெட்டிக் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
