"தரையில என் கால் பட்டாலே மயக்கம் வந்துடும்".. 23 மணி நேரம் படுக்கையில் கழிக்கும் பெண்.. வினோத காரணம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 31, 2022 03:53 PM

ஒரு நாளைக்கு சுமார் 23 மணி நேரம் வரை கட்டிலிலேயே இளம்பெண் கழித்து வரும் நிலையில், இதற்கான காரணம் பலரையும் மிரள வைத்துள்ளது.

woman allergic to gravity spends 23 hours a day in bed

Also Read | விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்.. "அவர் ஷேர் பண்ண ஃபோட்டோ தான் செம!!"

Maine அருகே அமைந்துள்ள Bangor என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson. 28 வயதாகும் இந்த பெண்ணுக்கு மிக அரிய வகை பிரச்சனை ஒன்று உள்ளது.

Postural Tachycardia என்னும் தொற்று மூலம் Lyndsa பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக அவர் உட்காரும் போதோ அல்லது நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில், அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

woman allergic to gravity spends 23 hours a day in bed

அது மட்டுமில்லாமல், புவி ஈர்ப்பு (Gravity) மீதுள்ள அலர்ஜி காரணமாக தனக்கு இப்படி நிகழ்வதாகவும் Lyndsi குறிப்பிட்டுள்ளார். இது பற்றி பேசும் Lyndsi Johnson, "எனக்கு புவி ஈர்ப்பு என்றால் ஒருவித அலர்ஜி இருக்கிறது. இது கேட்பதற்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் அது தான் உண்மை. என்னால் மூன்று நிமிடத்திற்கு மேல் எழுந்து நிற்க முடியாது. அப்படி நின்றால் மயக்கமோ அல்லது உடல்நிலை சரி இல்லாமலோ ஆகி விடும். நான் படுத்து கிடக்கும் போது மட்டும் தான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நாள் முழுவதும், அதாவது 23 மணி நேரம் வரை நான் படுக்கையில் தான் இருக்கிறேன்" என Lyndsi கூறி உள்ளார்.

woman allergic to gravity spends 23 hours a day in bed

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு, கடற்படையில் Lyndsi பணிபுரிந்து வந்த போது அவருக்கு வயிற்று வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல, அவரது உடல்நிலை மோசமடைய ஆரம்பித்துள்ள நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்களும் என்ன தவறு நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், அவரது உடல்நிலை காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு, கடற்படையில் இருந்து Lyndsi விலக வேண்டிய கட்டாயம் உருவானது. ஆறு மாதங்கள் கழித்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் இருந்துள்ளது. ஆனாலும், Lyndsi-க்கு என்ன தவறு நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் கணிக்கத் தவறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

woman allergic to gravity spends 23 hours a day in bed

இறுதியில், கடந்த பிப்ரவரி மாதம், Lyndsi-க்கு என்ன ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. ஒரு நாளைக்கு சுமார் 3 தடவை வரை அவர் மயக்கமடைவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கால் மேல் கால் போட்டு இருந்த நிலையில் தான், உணவு அருந்தவும் குளிக்கவும் அவரால் முடியும் என்றும் தெரிகிறது. இது குணமடைய வாய்ப்பு அரிதான ஒன்றும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தரையில் கால் பட்டாலே, பெண்ணுக்கு மயக்கம் வந்து விடும் என்ற விஷயம், பலரையும் அதிர்ச்சியில் உறைய  வைத்துள்ளது.

Also Read | "நீங்க வரலைன்னா சோறு மிச்சம்".. Trend ஆகும் திருமண அழைப்பிதழ்.. "சாப்பாடு, Gift பத்துன விஷயத்துக்கே லைக்ஸ அள்ளி போடலாம்"

Tags : #WOMAN #ALLERGIC #GRAVITY #BED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman allergic to gravity spends 23 hours a day in bed | World News.