"நீங்க வரலைன்னா சோறு மிச்சம்".. TREND ஆகும் திருமண அழைப்பிதழ்.. "சாப்பாடு, GIFT பத்துன விஷயத்துக்கே லைக்ஸ அள்ளி போடலாம்"
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமீப காலத்தில், திருமணம் தொடர்பான பத்திரிக்கைகள் தான் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. அப்படி ஒரு வித்தியாசமான திருமண பத்திரிக்கையின் புகைப்படம் தான், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே, அது தொடர்பான ஏதாவது ஒரு விஷயம், வைரலாகி கொண்டே தான் இருக்கும். மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.
அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.
இதற்காக, இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முன்பே எடுக்கப்படும் போட்டோஷூட் தொடங்கி, திருமண பத்திரிக்கை என அனைத்திலுமே ஏதாவது ஒரு புதுமையை அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அடிக்கடி நடைபெறும் வித்தியாசமான திருமண போட்டோசூட் தொடர்பான புகைப்படங்கள் ஏராளம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
அதே போல, சமீப காலமாக அடுத்தடுத்து நிறைய திருமண அழைப்பிதழ்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் தொடர்பான புகைப்படம், மீண்டும் இணையத்தில் வைரலாகி திருமணம் தொடர்பான டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதன்படி, கடந்த 29 ஆம் தேதியன்று, வடக்கனந்தல் என்னும் பகுதியில் கண்ணதாசன் மற்றும் நவீனா ஆகியோருக்கு திருமணம் நிகழ்ந்துள்ளது. அதே போல, ஒவ்வொரு விஷயமும், கேள்விகளுடன் கூடிய பதில் என அதில் இடம்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, 'என்னப்பா விசேஷம்?' என்ற கேள்வியுடன் கல்யாணம் என்ற பதில் இருக்கிறது.
இது போல, மாப்பிள்ளை பெயர் அருகே Hero என்றும், மணப்பெண் பெயர் அருகே Heroine என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த திருமணம் திங்கள்கிழமை என்பதால், "Monday- ல வச்சிருகிங்க கண்டிப்பா வரனுமா?" என்ற கேள்விக்கு மணமக்கள் சொல்லும் பதிலாக, "கண்டிப்பா எப்படியாவது Monday- லீவ போட்டு துன்பப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு Buso-Traino & Flighto புடிச்சு வரனும்னு சொல்லமாட்டேன். நீங்க வரலேனா எங்களுக்கு சோறு மிச்சம். இருந்தாலும் நீங்க கண்டிப்பா வந்து சேந்துருங்க" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி சாப்பாடு, கிஃப்ட் என ஒவ்வொன்றை குறித்தும் செம ரணகளமான பதில்கள், இந்த திருமண பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.
திருமண நாள், நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் இருப்பதை தாண்டி, திருமண பத்திரிக்கையில் இப்படி ஏராளமான புதுமையான விஷயங்களுடன் அசத்தலாக அச்சடிக்கப்பட்டுள்ள விஷயம், தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Also Read | விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்.. "அவர் ஷேர் பண்ண ஃபோட்டோ தான் செம!!"