"10-வது கூட பாஸ் பண்ணலையேன்னு ரொம்ப கவலைப்பட்டிருக்கேன்".. அப்பாவுக்கு பயிற்சி அளித்த மகன்.. பரீட்சை ரிசல்ட்டை பார்த்து திகைச்சு போன உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் மகன் அளித்த பயிற்சியின் மூலமாக தந்தை பத்தாவது தேர்ச்சி பெற்ற சம்பவம் பலரையும் வியப்படைய செய்துள்ளது.
தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு.. மாணவிக்கு நேர்ந்த துயரம்..சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
28 வருஷ கனவு
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் ரஹமதுல்லா. 42 வயதான இவர் துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். சிறுவயதில் வறுமை காரணமாக 10-வது படிக்கமுடியாத கவலை ரஹமதுல்லாவுக்கு இருந்திருக்கிறது. இதனால் அவரது மகன், ஃபரான் தனது தந்தைக்கு கல்வி கற்றுக்கொடுத்திருக்கிறார். இதன்மூலம் தேர்வில் 333 மதிப்பெண்கள் பெற்று 28 ஆண்டுகளுக்கு பிறகு பத்தாவது பாஸ் செய்திருக்கிறார் ரஹமத்துல்லா.
வறுமை
இதுகுறித்துப் பேசிய ரஹமத்துல்லா,"நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும் என்னுடைய அப்பா 10 வது வரை படிக்கும்படி வற்புறுத்துவார். ஆனால் எங்களது குடும்பம் வறுமையில் இருந்ததால் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டேன். ஆனால்,10 ஆம் வகுப்பு முடிக்க முடியாமல் போனதை நினைத்து பலநாள் கவலைப்பட்டிருக்கிறேன். இதோ இப்போது என்னுடைய மகன் அளித்த பயிற்சியின் பலனாக இன்று தேர்ச்சியும் பெற்றுவிட்டேன்" என கண்கலங்கியபடி கூறினார்.
கனவு
தனது தந்தை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறித்து பேசிய அவரது மகன் ஃபரான்," இப்போது பெரும்பாலான பணிகளுக்கு குறைந்தபட்ச தகுதியாக பத்தாவது தேர்ச்சியடைந்திருக்கவேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால் எனது அப்பாவை தேர்ச்சி பெறவைக்க விரும்பினேன். அவர், பணியை முடித்து வீட்டிற்கு வரும்போது நான் அவருக்கு சொல்லிக்கொடுத்தேன். இடையில் நானும் படித்தேன். அவர் தற்போது தேர்ச்சியடைந்திருப்பது எங்களது குடும்பத்தையே மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது" என்றார்.
ஃபரான் தனது பத்தாவது பரீட்சையில் 98 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். 613 மதிப்பெண்களை எடுத்துள்ள ஃபரான் மென்பொருள் பொறியாளர் அல்லது ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார்.
28 வருடங்களாக விடா முயற்சியுடன் படித்துவந்த ரஹமத்துல்லா இறுதியாக தனது மகனின் உதவியுடன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அந்தப் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை .. இவ்வளோ திட்டங்கள் இருக்கா..? முழு விபரம்.!