சென்னையில் இருந்து ஊருக்கு போன கொஞ்ச நாள்ல அப்பா மரணம்.. கைதான மகன் சொன்ன ‘திடுக்கிடும்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டை எழுதித் தராத ஆத்திரத்தில் தந்தைக்கு மகனால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘என்னய்யா ஒரே மர்மமா இருக்கு’.. தானாக பின்னால் வந்த சைக்கிள் ரிக்சா.. திகில் வீடியோ..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி பகுதியை சேர்ந்தவர் மகாராஜன். இவர் அப்பகுதியில் மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மனைவி முருகம்மாள். இந்த தம்பதிக்கு பெனிஸ்கர் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மகன் பெனிஸ்கர் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெனிஸ்கர், சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்
இந்த நிலையில், நேற்று காலை மகாராஜன் வீட்டில் தூங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சாத்தான்குளம் போலீசார் மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதலில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது மகாராஜனின் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து வந்த மகாராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மகன் பெனிஸ்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெனிஸ்கர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதில் கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை என சொந்த தொழில் தொடங்க நினைத்துள்ளார். இதற்காக தந்தை மகாராஜனிடம் பெனிஸ்கர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுள்ளார். வீட்டு பத்திரத்தை வைத்து வங்கியில் லோன் வாங்கி தொழில் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கும் மகாராஜன் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பெனிஸ்கர், தனது தந்தையின் கழுத்தை நெரித்து கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு தாய் முருகம்மாள், தங்கை இசக்கிரேவதி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | விமானத்தில் அண்ணன், தம்பிக்குள் அடிதடி.. காரணத்தை கேட்டு ஷாக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

மற்ற செய்திகள்
