அப்பாவை காணோம் என புகார் கொடுத்த மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.. சென்னையில் ஷாக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மகனால் அப்பாவுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Father found dead son abscond in Chennai Father found dead son abscond in Chennai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/father-found-dead-son-abscond-in-chennai.jpg)
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 80). இவரது மகள் காஞ்சனா, தனது அப்பா குமரேசனை காணவில்லை என்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமரேசனின் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டுக்குள் ரத்த கறைகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் குமரேசனின் மகன் குணசேகரன் (வயது 50) தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது தந்தையை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காவேரிப்பாக்கத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவேரிபாக்கம் சென்று குமரேசனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். எதற்காக குணசேகரன் இப்படி செய்தார்? என அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குணசேகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)