'ஃப்ரெண்டுனு தானே நம்பி வந்தேன்'...இளம் பெண்ணின் கதறல்...வீடியோ எடுத்து ரசித்த காமுகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 11, 2019 04:05 PM

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக கருதப்படும் தமிழ்நாட்டில்,அந்த பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Heart Breaking Video Of Pollachi Rape goes viral

பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது.இருவரும் தொடர்ந்து முகநூலில் பேசிக்கொள்ள,நட்பு ஆழமானது.இதனால் திருநாவுக்கரசு மீது நம்பிக்கையும் மதிப்பும் கொண்ட அந்த பெண் அவரை நேரில் சந்தித்துள்ளார்.இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.அப்போது வழியில் காரில் ஏறிக்கொண்டு அவரது நண்பர்கள்  அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.

நண்பனாக நினைத்து பழகியவன் இப்படி கொடூரமாக நடந்துகொண்டதை நினைத்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்,நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தார்.புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனில் 40 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.ஆனால் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவாக இருந்து வந்தான்.

இந்நிலையில் இதில் அதிர்ச்சி திருப்பமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரை பாலியல் வன்கொடுமை செய்து,அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனிடையே தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை பொள்ளாச்சியை அடுத்த மாகினாம்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனிடையே நண்பன் என்று நம்பி வந்த இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுக்கும்,வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இளகிய மனத்துடையோர் காண முடியாத அளவிற்கு,இளம் பெண்ணின் கதறல் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.உன்னை நம்பி தானே நான் வந்தேன்,ஏன் இப்படி என்ன பண்ற என அந்த இளம்பெண்  கெஞ்சியும் விடாமல் அந்த கொடூரர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள்.காண்போர் இதயத்தை நொறுக்கும் அளவிற்கு,அந்த இளம் பெண்ணின் கதறல்,வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பெண்களின் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகத்திலேயே இந்த நிலையா?என்ற அதிர்ச்சியான கேள்வியை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

இளம் பெண்ணின் நலன் கருதி அந்த வீடியோவானது இந்த செய்தியுடன் இணைக்கப்படவில்லை.

Tags : #RAPE #SEXUALABUSE #POLLACHI SEXUAL ABUSE