'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா?'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி!'... 'வெளியான முக்கிய தகவல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2-3 ஆண்டுகளில் எத்தனை கோடி சம்பாதித்துள்ளார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தற்கொலை அல்ல சுஷாந்தை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் எனவும், அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகள் நாள்தோறும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சுஷாந்துக்கு பணப் பிரச்சனையோ, பட வாய்ப்புகள் பெறுவதில் சிக்கலோ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள அமலாக்கத்துறை வட்டாரத்தினர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டேலண்ட் மேனேஜரான ஜெயந்தி சாஹாவின் வாக்குமூலத்தின்படி சுஷாந்த் கடந்த 2-3 ஆண்டுகளில் ரூ 30 முதல் 35 கோடி வரை சம்பாதித்துள்ளதாகவும், அதற்கு வங்கி ஆவணங்கள் சாட்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
