"நாலஞ்சு நாளா தேடி அலைஞ்சு... "கடைசியா இந்த கோலத்துல தான் எங்க தங்கத்த பாக்கணுமா??"... உடைந்து நொறுங்கிய 'குடும்பம்'... 'பகீர்' கிளப்பிய 'சம்பவம்'
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தையடுத்த கிராமம் ஒன்றிலிருந்து சில தினங்களுக்கு முன் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமி சிலரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதும் நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனைகளின் முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். போலீசார் தரப்பில், சிறுமியின் முகத்தில் சில தீக்காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமப் பகுதி மக்கள், சிறுமியின் முகத்தின் மீது யாரோ, ஆசிட் ஊற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே எதுவும் உறுதியாக தெரிவிக்கப்படும் என போலீசார் கருதும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை அன்று மாடு மேய்ப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் பெற்றோர்கள் தனது மகளின் மரணத்திற்கு சிலரை சந்தேகித்த நிலையில் அவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அக்கிராம பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை எழுப்பியுள்ளது. முன்னதாக கடந்த மூன்று வாரங்களில் மட்டும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 சிறுமிகள் இது போன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
