'10 மாசம் சுமந்து பெத்த அம்மா டா அவங்க!. நீ பிறக்கும்போது கூட இவ்ளோ வலிய அனுபவிச்சிருக்க மாட்டாங்க!.. மனசாட்சியே இல்லயா உனக்கு!?'.. அதிர்ந்துபோன காவல்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகஞ்சா வாங்குவதற்கு பணம் கொடுக்க மறுத்த தாயை, பெற்ற மகன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில், நயீம் கான் என்ற 23 வயது இளைஞர், அவரது தாய் ஜஃப்ரூன் பீவியிடம், கஞ்சா வாங்குவதற்காக 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்போது, குடும்பத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருவதால், பணம் இல்லை என்று தாய் மறுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நயீம் கான் ஒரு இரும்பு கம்பியை எடுத்து தாய் பீவியை கொடூரமாக தாக்கியுள்ளார். அதில், பீவிக்கு 2 கைகளும் உடைந்துவிட்டது.
மேலும், பீவியை தரதரவென இழுத்துவந்து, வாயில் ஒரு துணியை அடைத்து, சத்தம் எழுப்பாத வகையில் மீண்டும் கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். அந்த நேரத்தில், நயீம் கானின் தம்பி வீட்டுக்குள் வரவே, தாய் ஜஃப்ரூன் சரமாரியாக தாக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், நயீம் கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதையடுத்து, தாய் ஜஃப்ரூன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரது உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
