'3 பேர் இறந்த அதே இடத்தில்'... 'கிடந்ததை பார்த்து உறைந்துநின்ற அக்கம்பக்கத்தினர்'... 'மர்ம கும்பல் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்மிடிப்பூண்டியில் ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் ஒன்று தலையை தனியாக வீசி சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பழிக்குப் பழியாக ரவுடியை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் ஒன்று அவருடைய தலையை பல கிலோமீட்டர் தள்ளி வீசி சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்ற அந்த ரவுடி மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவர் என 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் மாதவனை புது கும்மிடிப்பூண்டியில் உள்ள தைல தோப்பில் வைத்து மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது.
இதையடுத்து மாதவனின் தலையை துண்டித்த அந்த கும்பல், ஏற்கெனவே மாதவனால் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட 3 பேர் இறந்த அதே இடத்தில் வீசி விட்டு சென்றுள்ளது. எனவே இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
