'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நாளை (25-11-2020) மாலை கரையை கடக்குமென தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 7 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் எனவும், வரும் 27ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள தென் மண்டல ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், "நிவர் புயல் சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும். புயல் காரணமாக வரும் 27ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 25ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் கனமழை பெய்ய வாயப்புள்ளது.
குறிப்பாக காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். நாளை புயல் கரையை கடக்கும்போது, புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், ஏனைய மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், சமயங்களில் 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நாளை இரவு வரை தமிழக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இயல்பை விட 2 மீட்டர் உயரம் அலை எழும்பக்கூடும். நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல், கடந்த 3 மணி நேரமாக நகராமல், ஒரே இடத்தில் உள்ளது. நகர்வு நேரமாக குறைவாக உள்ளது. நிலப்பகுதியை அணுகும்போது, புயலின் வேகம் குறைவது இயல்பு. வேகம் குறைந்தாலும், வலுப்பெறுவது என்பதில் மாற்றமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.