‘ஒரே ஒரு புகாரால் 95 நாட்கள் சிறை!’.. ‘வேலையை இழந்த இன்ஜினியர்’ .. டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை.. நீதிபதியின் பரபரப்பு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவெடுத்திருந்த நிலையில், இரு குடும்பத்திற்வ்யில் நிலத்தகராறு ஏற்பட்டது. இதனால் சந்தோஷின் குடும்பம் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அதன்பின்னர், சந்தோஷ் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து கொண்டிருந்தார். இந்நிலையில் முன்பு திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்த பெண்ணின் தாய், சந்தோஷ் தனது மகளை வன்கொடுமை செய்து விட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சந்தோஷ் பாலியல் புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டு, 95 நாட்கள் சிறையில் இருந்தார். பின்னர் சந்தோஷ்க்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் சந்தோஷ் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி புகார் அளித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், டி.என்.ஏ சோதனையின் மூலம், புகார் அளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என வழக்கு விசாரணையின் முடிவில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சந்தோஷ் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தன் மீது பொய்யான புகார் அளித்து, தன்னை சிறையிலடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்தார். சந்தோஷ் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பொய்யக புகார் அளித்ததன் காரணமாக தான் சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை தான்னால் தொடர முடியவில்லை. இதுவரை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை தன்னுடைய வழக்கு செலவாக வழக்கறிஞருக்கு செலவழித்ததாகவும், மேலும் தன் மீதான பொய் வழக்கால் தனக்கு ஓட்டுனர் உரிமம் மறுக்கப்பட்டது. பொறியாளராக பணியாற்ற வேண்டிய தான் தற்போது அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொய்யான பாலியல் புகார் கொடுத்து சந்தோஷின் எதிர்காலத்தை பாழாக்கியதால், அவருக்கு நஷ்ட ஈடாக 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பொய்யான புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டார்.

மற்ற செய்திகள்
