'4 வருஷத்துக்கு' அப்புறம் சென்னை, கடலோர மாவட்டங்களை குறிவைக்கும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. முன்பே ‘விடுக்கப்பட்டுள்ள’ அபாய எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை, 'நிவார்' புயல் குறி வைத்துள்ளது.

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன், 'வர்தா' புயல், சென்னையை பதம் பார்த்ததை எளிதில் மறந்துவிடமுடியாது. இதே போல சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை, 'நிவார்' புயல் குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நாளை(நவ.,24) அதிகாலை முதல், சென்னை மற்றும் சுற்றுப்புற கடலோர மாவட்டங்களில், புயலின் தாக்கத்தால், அதிக கன மழை பெய்யும் என்றும், திடீர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு உண்டாவதுடன், முன்னெச்சரிக்கை பணிகளை துவங்கவும், மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டிய அவசர நிலையும் அவசியமாகியுள்ளது.
குறிப்பாக, மாமல்லபுரம் அருகேதான் புயல் கரையைக் கடக்கும் என்பதால், கல்பாக்கம் அணு மின் நிலையம், வல்லுார், எண்ணுார் மின் நிலையங்கள், சென்னை, எண்ணுார், காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகை மற்றும் கடலுார் உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற செய்திகள்
