‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்!.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கடலூர் போன்ற இன்னும் சில கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் வீசும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசு தலைமையிலான அதிகாரிகள் மின் துண்டிப்பு, பேருந்து -ரயில் சேவைகள் நிறுத்தம், உணவு ஏற்பாடு, தங்கும் முகாம்கள் என தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகின்றனர். அத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பிப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், நிவர் புயல் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகருவதாகவும், சென்னை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே 120 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும். இதனால் தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.