'தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’... 'மகாபலிபுரம் அருகே புயல் கடக்க வாய்ப்பு'... ‘புதிய புயலுக்கு இதுதான் பெயர்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புயல் எச்சரிக்கை காரணமாக தமிழம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 25-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது. பின்னர் அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்று, புயல் சின்னமாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னம் வரும் 25-ம் தேதியன்று மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வருகிற 24, 25-ம் தேதிகளில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ரெட் அலர்ட்’டும் கொடுக்கப்பட்டுள்ளது. 24-ந் தேதி கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும், 25-ந் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’டும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது.
‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழையும், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

மற்ற செய்திகள்
