‘வார்னர் காட்டிய அதிரடி’.. அசத்தல் வெற்றி பெற்ற ஹைதராபாத்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 30, 2019 12:12 AM

ராஜஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

IPL 2019: Hyderabad won by 5 wickets

2019 ஐபிஎல் டி20 லீக்கின் அடுத்த போட்டி இன்று(29.03.2019)   ஹைதராபாத்தில்  நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ரஹானே களமிறங்கினர். இதில் பட்லர் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனை அடுத்து 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் ராஜஸ்தான் அணி எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. 19 -வது ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 69 ரன்களை அடித்து அசத்தினார்.

Tags : #IPL #IPL2019 #SRHVSRR #VIVOIPL #VIJAYSANKAR #WARNER #ORANGEARMY