‘பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து.. 14 பேர்..’ பதறவைத்த விபத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 31, 2019 01:42 PM
கோவை அருகே உள்ள அவிநாசியில் கேரள சொகுசு பேருந்து ஒன்று பாலத்தின் மைய பாதுகாப்பு தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக காயமடைந்துள்ளனர்.
கேரளாவின் பத்தினம் திட்டா பகுதியில் இருந்து 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு நேற்று இரவு பெங்களூருக்கு நின்று கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த இந்த சொகுசு பேருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே செல்லும் போது இத்தகைய விபத்துக்குள்ளாகியது. பேருந்து இயக்கிச் சென்ற ஜெய்சன் என்கிற நபர் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து அவிநாசி ரோட்டில் உள்ள பாலத்தின் மைய தடுப்புச் சுவரின் மீது பேருந்துடன் மோதியதால் பேருந்து அந்தரத்தில் தொங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அப்பகுதி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை காவலர்கள் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்டனர். மேலும் காயம்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட மொத்தம் காயம்பட்ட 14 பேரும் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேற்சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது பேருந்தை இயக்கி வந்த ஜெய்சன் என்பவர் மதுபோதையில் இருந்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.