’முதல்முறை இலவச ரைடு.. ஏப்ரல் வரை ஆஃபர்கள்’.. பிரபல கேப் நிறுவனம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 28, 2019 01:30 PM

இந்தியாவின் மிக முக்கியமான கால் டாக்ஸி நிறுவனம் லண்டனில் தற்போது ஒரு மாபெரும் சலுகையை அறிவித்துள்ளதால், லண்டனின் முக்கிய நகரங்களில் ஓலா நிறுவனம் பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

OLA offers free rides in order start their Service to UK customers

பொதுவாக பஜாஜ் மற்றும் பியாஜியோ நிறுவனங்களால் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மினி டெம்போக்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன் ஒரு முக்கிய மைல் ஸ்டோனாக மூன்று சக்கர வாகனமான ஆட்டோ முன்பை விடவும் தற்போது ஓலா நிறுவனத்தின் முக்கிய சேவையாக மாறியுள்ளது.

மொபைல் ஆப் மூலம், இருக்கும் லொகேஷனுக்கு வரவழைத்துவிட்டு, சேரும் லொகேஷனை கொடுத்துவிட்டு பயணம் செய்ய முடிகிற இந்த வசதி பலருக்கும் தற்போது எளிமையாக இருப்பதால் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஓலா நிறுவனம் பின்னர் லண்டனில் தனது கிளையை விரிவுபடுத்தத் தொடங்கியது.

இதன் ஒரு அங்கமாக இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் ஓலா ஆட்டோ இலவச ரைடுகளுக்கான சேவையையும், 50 சதவீதம் கட்டண சலுகையையும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தவுடன் புக் செய்பவர்களுக்கு  முதல் பயணம் இலவசம் என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளை ஏப்ரல் மாதம் வரையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஓலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஆக்ஸ்டு மாதம் பிரிஸ்டல், பாத், எக்ஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் தொடங்கிய சேவை, அடுத்து ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் கிளைபரப்பத் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #UK #OLA #CAB #LIVERPOOL