நீண்ட நாள் பெண் தோழியிடம் காதலை சொன்ன இளைஞர்.. சொன்ன ஒரு சில தினத்தில் நடந்த துயரம்.. "எல்லாத்துக்கும் ஒரு SPOON தான் காரணமா?"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 23, 2023 06:03 PM

இளம்பெண் ஒருவர் தனது காதலனின் லவ் ப்ரபோசலை ஏற்று கொண்ட சில தினங்களில் அவருக்கு நேர்ந்த துயரம் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

Young woman passed away after her boy friend proposal

                                                    Image Credits : Craig McKinnon

Also Read | "என்ன மன்னிச்சுக்கோ".. விமான விபத்துக்கு முன் மனைவிக்கு கணவர் அனுப்பிய கடைசி மெசேஜ்!!.. மனம் நொறுங்கும் பின்னணி!!

பிரிட்டனின் சாலிஸ்பரி என்னும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் Jess Prinslo. இவருக்கு தற்போது 24 வயதாகும் நிலையில் அவரது ஆண் தோழரான Craig McKinnon என்பவருடன் தென் ஆப்பிரிக்காவுக்கு விடுமுறை கொண்டாடும் வகையில் சென்று இருந்தார்.

அந்த சமயத்தில் தனது நீண்ட நாள் தோழியாக இருக்கும் ஜெஸ்ஸிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார் க்ரெய்க். இதனை ஜெஸ் ஏற்றுக் கொள்ள இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடவும் அவர்கள் இருவரும் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்காக ஜோகன்ஸ்பார்க் செல்ல இருந்த சமயத்தில் தான் எதிர்பாராத துயரம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது.

Young woman passed away after her boy friend proposal

Image Credits : Craig McKinnon

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் ஜெஸ்ஸின் குடும்பத்தினர் நிறைய பேர் உள்ளதால் அங்கே சென்று காதலை வெளிப்படுத்த வேண்டும் என க்ரெய்க் முடிவு செய்து அதனை சிறப்பாக செயல்படுத்தவும் செய்திருந்தார்.

அப்படி இருக்கையில், ஜெஸ்ஸிற்கு பால் பொருட்கள் காரணமாக ஏற்படும் அலர்ஜி ஒன்றும் இருந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே, பால் பொருட்களால் ஏற்படும் இந்த ஒவ்வாமை ஜெஸ்ஸிற்கு அப்போது ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவரது தொண்டையும் அடைத்துக் கொள்ள, இக்கட்டான சூழலில் அவரை மருத்துவமனையிலும் Craig சேர்த்துள்ளார்.

Young woman passed away after her boy friend proposal

Image Credits : Craig McKinnon

அங்கே ஒரு சில தினங்களில் சிகிச்சை பலன் அளிக்காமல், ஜெஸ் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதற்கான காரணமாக வெளியாகி உள்ள தகவல்களின் படி, அவருக்கான தேநீரில் ஸ்பூன் ஒன்றை தவறுதலாக பயன்படுத்தி கலக்கியது தான் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஜெஸ்ஸின் மரணத்தால் உடைந்து போயுள்ள Craig, 3 ஆண்டுகளுக்கு மேலாக தம்முடன் பயணித்த அந்த தருணங்கள் மறக்க முடியாதவை என்றும், வாழ்க்கையின் மிக மோசமான தருணத்தை எதிர் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் கிரெய்க் மற்றும் ஜெஸ் ஆகியோர் சந்தித்துக் கொண்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் என தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், சமீபத்தில் திருமணம் செய்யும் படி Propose செய்து விரைவில் திருமணமும் செய்து கொள்ள திட்டம் போட்டிருந்த நிலையில், ஒரு சில தினத்திலேயே காதலியும் இறந்து போன சம்பவம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Also Read | உணவு டெலிவரி -ல இப்படி ஒண்ணு நடக்குதா?.. தெரிஞ்சதும் CEO -வை அலெர்ட் செய்த கஸ்டமர்.. பரபரப்பு Post...

Tags : #YOUNG WOMAN #BOY FRIEND #PROPOSAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young woman passed away after her boy friend proposal | World News.