கொரோனா பாதுகாப்பு உடையில்... காதலை வெளிப்படுத்திய காதலன்!.. 'இப்ப இல்லனா... எப்பவும் இல்ல'... லவ் ஓகே ஆச்சா இல்லயா?.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் உள்ள மருத்துவனையில் பணிபுரியும் சுகாதார ஊழியர் ஒருவர் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து தனது காதலை காதலிக்கு வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுவாக தான் காதலிக்கும் காதிலியிடம் காதலை வெளிபடுத்த இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை செயல்படுத்து வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட் மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பரபரப்பான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடம் தனது காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.
இத்தாலியின் புக்லியாவில் உள்ள ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே. கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது கடினமான பணிக்கு இடையில் காதலிக்கும் தனது காதலியிடம் காதலை வெளிபடுத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தான் அணிந்திருந்த கொரோனா பாதுகாப்பு உடையின் பின்புறம் "கார்மெலி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா" ஆம் மற்றும் இல்லை என எழுதி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதில் சுகாதார ஊழியரின் கோரிக்கைக்கு பதில் அளித்த அவரது காதலி கார்மெலி காதலை ஏற்றுக்கொள்வதாக (ஆம்) தெரிவித்துள்ளார்.
தனது அயராத பணியிலும் தன் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
