இப்படியா சாப்பாடு போடுவீங்க.. காதலன் வீட்டில் அளித்த விருந்தால் 'பிரேக் அப்’ பண்ணிய காதலி.!
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது இணையத்தில் ஏதாவது வினோத சம்பவம் தொடர்பான செய்திகள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். ஒரு பக்கம் அவை வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தாலும், மறுபக்கம் இப்படி கூட நடக்குமா என ஒருவித அதிர்ச்சியும் கூட தோன்றலாம்.

இந்த நிலையில், சற்று பரபரப்பை கிளப்பக் கூடிய ஒரு சம்பவம் குறித்த தகவல் தான் இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
பொதுவாக, இருவருக்கு இடையே காதல் உருவாகி ஒருவரை ஒருவர் மனம் உருகி விரும்பும் சமயத்தில் திடீரென ஏதாவது மனக்கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டு அவர்கள் பிரேக் அப் செய்வதும் உண்டு. இதனிடையே அப்படி காதலித்து மிக மிக வினோத காரணம் ஒன்றிற்காக தனது காதலனை பெண் ஒருவர் பிரேக் அப் செய்துள்ளார்.
சீனாவில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அங்கே உள்ள இளம் பெண் ஒருவர் அவரது காதலனின் வீட்டிற்கு முதல் முறையாக சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. முன்னதாக, இரண்டு நாட்கள் காதலன் வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அங்கே சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து, காதலன் வீட்டிற்கு அந்த இளம் பெண் சென்ற நிலையில், அவருக்கு மத்திய உணவு வழங்கப்பட்டுள்ளது. அங்கே நூடூல்ஸ், ஃபிரைட் முட்டைகள் என வழக்கமான உணவு வகைகள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. காதலன் வீட்டில் ஸ்பெஷலாக உணவு வகைகளை எதிர்பார்த்திருந்த காதலி, வழக்கமான உணவுகள் இருப்பதை கண்டதால் சற்று ஏமாற்றம் அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல், அங்கே தங்கி இருந்த இரண்டு நாட்களும் இது போன்ற உணவுகளே அந்த இளம் பெண்ணுக்கு வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றது.
இதனைத் தொடர்ந்து, காதலன் வீட்டில் உள்ள உணவு குறித்து அவரிடமே மன வருத்தத்துடன் இளம் பெண் பேச, இறுதியில் இந்த வீட்டில் திருமணத்திற்கு பிறகு உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறிக் கொண்டு காதலை அவர் பிரேக் அப் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏதேதோ காரணங்களுக்காக காதல் பிரேக் அப் ஆவது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், காதலன் வீட்டில் உணவு பிடிக்கவில்லை எனக்கூறி காதலை வேண்டாம் என வைத்த இளம் பெண் குறித்த செய்தி தற்போது அதிக வைரலாகி வருகிறது.
Also Read | எப்புட்றா.. இலங்கை வீரர் அடிச்ச ரிஸ்க்கான சிக்ஸ்.. கோலியே மிரண்டு போய்ட்டாரு.. வீடியோ..!

மற்ற செய்திகள்
