உணவு டெலிவரி -ல இப்படி ஒண்ணு நடக்குதா?.. தெரிஞ்சதும் CEO -வை அலெர்ட் செய்த கஸ்டமர்.. பரபரப்பு POST...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் நகர பகுதிகளில் அதிகமானோர் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
நேராக உணவகங்களில் சென்று வருவதைவிட ஆன்லைன் மூலம் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்தால் அவர்களை தேடியே வந்து விடும் என்பதால் இந்த வழிகளை பலரும் பின்பற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக பல உணவு டெலிவரி நிறுவனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. அதே போல, நிறைய இடங்களில் உணவு டெலிவரி ஊழியர்கள் பைக்கில் பயணம் செய்வதையும் நாம் கவனிக்க நேரிடும். அது மட்டுமில்லாமல், அடிக்கடி உணவு டெலிவரி ஊழியர்கள் தொடர்பான செய்திகள் கூட இணையத்தில் வைரல் ஆவதை நாம் கவனித்திருப்போம்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த சோமாட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் தற்போது பகிர்ந்துள்ள பதிவு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, வினய் சாத்தி என்ற நபர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்த பதிவின் படி, பிரபல உணவகம் ஒன்றில் அவர் பர்கர் ஆர்டர் செய்ததாகவும் அதற்காக 200 ரூபாய் ஆன்லைனில் பணம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரம் கழித்து வினய் ஆர்டர் செய்த பர்கரும் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அப்போது அங்கே வந்த உணவு டெலிவரி ஊழியர், "நீங்கள் 700 முதல் 800 ரூபாய் வரை உணவு ஆர்டர் செய்வதாக இருந்தால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை தவிர்த்து கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யுங்கள், அப்படி தேர்ந்தெடுத்தால் என்னிடம் 200 ரூபாய் மட்டும் தந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆர்டரை பெற்றுக் கொள்ளலாம்” என்றும் கூறியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் இதற்கு மாற்று யோசனையாக, “நீங்கள் உணவை வாங்காமல் மறுத்து விட்டீர்கள் என்று கூறி எங்கள் நிறுவனத்திற்கு கணக்கு காட்டி விடுவேன்” என்றும் அவர் பதில் அளித்துள்ளார். இதனைக் கேட்டு வினய் அதிர்ந்து போகவே, இதனை தனது பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். அதாவது கேஷ் ஆன் டெலிவரி மூலம் உணவைக் கொடுக்கும் போது கஸ்டமர் வேண்டாம் என கூறியதாக குறிப்பிட்டு விட்டு, டெலிவரி ஊழியர்கள் அந்த பணத்தை எடுத்துக்கொள்ளும் இவ்விஷயத்தை மோசடி என குறிப்பிட்டு தன்னுடைய பதிவில் வினய் சோமட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயலையும் Tag செய்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் தனக்கு இது நல்ல ஆஃபர் தான் என்றாலும் தானும் ஒரு வணிகர் என்பதால், இந்த மோசடியை அம்பலப்படுத்த முடிவெடுத்ததாகவும் வினய் தெரிவித்துள்ளார்.
இதனை கவனித்த தீபிந்தர் கோயல், ”கண்டிப்பாக இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் தடுப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்துவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். Zomato சிஇஓ இதுகுறித்து கவனித்து பதிலளித்துள்ள நிலையில் தற்போது இந்த விசயம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.