கல்யாணம் முடிஞ்ச கையோடு கோயிலுக்கு கிளம்பிய ‘புதுமணதம்பதி’.. அப்போ மனைவி சொன்ன ‘ஒரு’ வார்த்தை.. ஆடிப்போன கணவன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண நாளில் தனக்கு மாதவிடாய் பற்றி மனைவி தெரிவிக்காததால் கணவர் விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருமணம் முடிந்ததும் பிரார்த்தனைக்காக கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது தனக்கு மாதவிடாய் இருப்பதாக தனது கணவரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது மூத்த சகோதரர் ஏற்கனவே வீட்டை கவனித்து வருவதால், குடும்ப செலவினங்களுக்கு தான் பணம் கொடுக்க கூடாது என மனைவி கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வீட்டில் உடனே ஏசி இயந்திரம் பொருத்த அவரது மனைவி கூறியுள்ளார். ஆனால் தன்னால் ஏசி வாங்க முடியாது என தனது மனைவியிடம் அந்த நபர் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு எதிர்பார்த்து என்னிடம் மோசமாக சண்டையிடுவதாக அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்
