என் வாழ்க்கையே போச்சு...! 'நான் சொல்றத நம்ப மாட்டீங்கனு தெரியும்...' 'ஆனாலும் என் நிலைமைய சொல்றேன்...' - 'ஐ.எஸ்' அமைப்பில் இணைந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஷமீமா பேகம் என்ற 22 வயது இஸ்லாமிய பெண்மணி ஒருவர் கடந்த 2015-ம் ஆண்டு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டு வெளியேறி சிரியாவுக்கு சென்றார்.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரையும் மணம் முடித்து 3 குழந்தைகளையும் பெற்றுள்ளார். ஆனால், பேகம் அவர்களின் மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர், சிரியவை சேர்ந்த ராணுவப்படை ஷமீமா பேகத்தை மீட்டு அங்குள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். அதன்பின், மனம் திருந்திய ஷமீமா பேகம் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். முன்பு இருந்ததைப் போலவே லண்டனில் வாழ்க்கையை நடத்த ஆசை கொண்டுள்ளார்.
இந்நிலையில், தான் மீண்டும் பிரிட்டனுக்கு நாடு திரும்ப விருப்பம் இருப்பதாகவும், தனது ரத்து செய்த குடியுரிமையை மீட்டு தரவேண்டும் என பேகம் பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், ஷமீமா பேகம் அவர்களின் கோரிக்கை அனைத்து நீதிமன்றங்களிலும் நிராகரிப்பட்டன.
இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ஷமீமா, 'நான் மிக பெரிய தவறு ஒன்றை செய்து விட்டேன். நான் எதைக் கூறினாலும் நம்ப மாட்டார்கள் என எனக்கு தெரியும்.
ஆனால், நான் செய்த தவறை உணர்ந்து இப்போது திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வேண்டுகிறேன். என்னை உலக மக்கள் அனைவரும் மன்னிக்க வேண்டும்.
நான் பிரிட்டன் பிரதமரிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட, நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன். நான் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தால், என்னை பிரிட்டனுக்கு அழைத்துச் சென்று, என்னிடம் விசாரணை நடத்துங்கள்.
நான் ஐ.எஸ்., அமைப்பில் இணைந்தது உண்மைதான். ஆனால், அங்கு நான் இணைந்து எதையும் செய்யவில்லை' எனத் தெரிவித்தார்.