'இப்டியா செய்றது?' .. 'நடுவானத்தில் பறக்கும்போது'.. 'பயத்தில் தெறித்த பயணிகள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 24, 2019 11:51 AM

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை பயணி ஒருவர் திடீரென திறக்க முயன்றதால் மற்ற பயணிகள் பீதியடைந்தனர்.

Indigo Flight Passenger Tried To Open the Door while flying

சமீபத்தில் விமானத்தின் கழிவறை என நினைத்து, விமானத்தின் கதவையே பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதேபோல் தற்போது நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முனைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து கவுஹாத்தி செல்ல புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் செய்வதறியாதுச் சென்று விமானத்தின் கதவைத் திறக்க முயற்சித்துள்ளார். 20 வயதான இர்ஷாத் அலி என்கிற இந்த பயணி எதனால் இவ்வாறு செய்தார் என விசாரித்தபோதுதான் உருக வைக்கும் செய்தி அனைவருக்கும் தெரியவந்தது.

தனது தாயார் இறந்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞரான இர்ஷாத் அலி, விமானத்தின் கதவுகளைத் திறந்து குதித்திருக்கக் கூடும் என்கிற நிலையில், சுற்றியிருந்த பயணிகள் அவரைத் தடுத்து ஆசுவாசப்படுத்தி அமரவைத்து, அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

அதன் பின்னர், விமானம் புவனேஸ்வருக்குத் திருப்பப்பட்டு அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இண்டிகோ விமானத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பலரையும் பதற்றப்படுத்தியுள்ளது.

Tags : #FLIGHT #PASSENGER #BHUBANESWAR #INDIGO