Kaateri logo top

விட்டு விட்டு எரியும் லைட்.. தோன்றி மறையும் உருவம்.. பீதியை கிளப்பும் இளம்பெண் 'வீடு'!!.. "உள்ள போகவே கால் நடுங்குமாம்"..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 08, 2022 04:41 PM

இளம்பெண் ஒருவர், தனது வீட்டுக்குள் பலரும் வர பயப்படுவதாகவும் கூறி, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

woman says people fear to set foot in her house

Also Read | யூடியூப் Scroll பண்றப்போ.. எதேச்சையா கூலி தொழிலாளி பாத்த வீடியோ.. "அடுத்த ஒரு வருஷத்துல அவரு பணக்காரானாவே மாறிட்டாரு.."

US பகுதியை சேர்ந்தவர் Beckie-Ann. 31 வயதாகும் இவர் அமானுஷ்ய ஆய்வாளராக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு கெமிக்கல் கொண்டு கெடாமல் சேகரித்து வைப்பது உள்ளிட்ட சில வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அப்படிப்பட்ட ஒரு துறையில் இருக்கும், பெக்கியின் வீடு கூட வினோதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீடு முழுக்க அவுஜா போர்டுகள், பயன்படுத்தப்பட்ட சவப் பெட்டிகள், அமானுஷ்ய புத்தகங்கள், இறந்தவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பயமுறுத்தும் பொருட்கள் கொண்டு அவரது வீடும் நிரம்பியுள்ளது.

அப்படி இருக்கையில், அவரது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பலரும் ஏதோ அமானுஷ்ய உணர்வு, பெக்கியின் வீட்டிற்குள் தோன்றுவதாகவும், வினோத உருவங்கள் தென்படுவதாகவும், தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், அவ்வப்போது எதிர்பாராத நேரத்தில் விளக்கு அணைந்து எரிவதாகவும் அச்சத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது குறித்து பேசும் பெக்கி, அப்படி தனது வீட்டை நினைத்து பயப்பட தேவை இல்லை என்றும் கூறி உள்ளார். பலரும் தனது வீட்டில் காலடி எடுத்து வைக்கவும் அஞ்சுவதாக பெக்கி குறிப்பிட்டுள்ளார்.

woman says people fear to set foot in her house

சமீபத்தில், அவரது நண்பர் ஒருவர், அங்குள்ள அவுஜா போர்டு ஒன்றில் கைவைத்த சமயத்தில் திடீரென அங்கிருந்து விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்துள்ளது. இதனால், பெக்கியின் நண்பர் அதிகம் பயந்து போயுள்ளார். அதே போல, ஒரு முறை பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, தலையில் வைக்கப்படும் முடிகளுடன் இருந்த ரீத் ஒன்றை பெக்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக, வீட்டில் இருந்த அனைவரும் தூக்கம் வராமல் தவித்ததாகவும் ஏதோ ஒரு பெண் ஒருவர் தலையில் ஏறிக் கொண்டிருந்தது போல உணர்ந்து, அஞ்சி நடுங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, முடியுடன் இருந்த அந்த ரீத்தையும் வீட்டில் இருந்து பெக்கி வெளியேற்றி உள்ளார். இதன் பின்னர், அவரது வீட்டிற்குள் அமானுஷ்யமாக எதுவும் நடைபெறவில்லை என்றும் பெக்கி தெரிவித்துள்ளார்.

woman says people fear to set foot in her house

தனது வீட்டை மிக வினோதமான முறையில், பெக்கி அலங்காரம் செய்து வைத்திருந்தது பலரின் புருவத்தை உயர்த்தி இருந்தாலும், அவை தான், தனது வீட்டிற்கு ஒரு தனிப்பட்ட தொடர்பை கொடுப்பது போல உணர்வதாகவும் பெக்கி கூறி உள்ளார்.

இது போக, ஒரு உடலின் பிரேத பரிசோதனை தொடர்பான புகைப்படங்களையும் தனது வீட்டில் பெக்கி சேகரித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவை தனக்கு அருவறுப்பாகவோ, கொடூரமாகவோ தோன்றவில்லை என்றும் பெக்கி கூறுகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சமீபத்தில், பெக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடவே, இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலானது.

சிலருக்கு இது விநோதமாகவும், பயமாகவும் இருந்தாலும், சிலர் பெக்கியின் வினோதமான அலங்காரத்திற்கு லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

Also Read | "மொத்தமா 1000 பவுண்டு இருந்துருக்கு.." ஆற்றில் மீனவர் கண்ட 'விஷயம்'.. வறட்சிக்கு மத்தியில் இத்தாலியில் உருவான 'பதற்றம்'!!

Tags : #WOMAN #PEOPLE #FEAR #HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman says people fear to set foot in her house | World News.