"10 நிமிஷம் பொறுத்துக்கோ".. பிரசவ வலியால் துடித்த மனைவி.. உயிரை கையில பிடிச்சுக்கிட்டு காரோட்டிய கணவன்.. கடைசில பெண் எடுத்த துணிச்சலான முடிவு.!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் ஒரு பெண், ஓடும் காரில் தனக்கு தானே பிரசவம் பார்த்திருக்கிறார். இது உள்ளூர் மக்களை திகைப்படைய செய்திருக்கிறது.
பிரசவ காலம் என்பது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம். எந்த நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலையில், சில நேரங்களில் நாம் நினைக்காத சில சம்பவங்களும் நிகழ்ந்துவிடும். அப்படித்தான் நடந்திருக்கிறது சியாரா முசெட்டி என்னும் இளம்பெண்ணுக்கும்.
பிரசவ வலி
இங்கிலாந்தின் விண்டர்மேர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஸ்பென்ஸ். 32 வயதான இவருக்கும் சியாரா முசெட்டி என்னும் பெண்மணிக்கும் திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவர் மீண்டும் கர்ப்படைமடைந்திருக்கிறார். அதற்காக சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளையும் இந்த தம்பதி பெற்றுவந்திருக்கிறது. இந்நிலையில், விண்டர்மேர் பகுதியில் கனமழை பெய்த ஒரு நாளில் சியாராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
இதனை சற்றும் எதிர்பாராத தம்பதி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், வெள்ளம் சூழ்ந்த சாலையில் காரை ஒட்டிச் செல்லவேண்டிய கட்டாயமும் எழுந்திருக்கிறது. வேறு வழியில்லை என்பதை அறிந்த ஜேம்ஸ் தனது காரில் மனைவியை ஏற்றிக்கொண்டு கம்ப்ரியா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு காரில் விரைந்துள்ளார் ஜேம்ஸ்.
வலி நிறைந்த பயணம்
காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சியாராவுக்கு வலி தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்திருக்கிறது. 10 நிமிட பயண தூரத்தில் தம்பதி சென்றுகொண்டிருந்த வேளையில், சியாராவின் பனிக்குடம் உடைந்திருக்கிறது. இதனை அறிந்து அதிர்ச்சியுற்ற அவர், காரை நிறுத்தவேண்டாம் எனவும் தொடர்ந்து மருத்துவமனைக்கு காரை செலுத்தவும் சொல்லியிருக்கிறார். இதனிடையே காரிலேயே சியாராவுக்கு பிரசவம் நடந்திருக்கிறது.
அதன்பின்னர், மருத்துவமனையை அடைந்த காரில் இருந்து இறங்கி உள்ளே ஓடியிருக்கிறார் ஜேம்ஸ். அங்கிருந்த மருத்துவர்களிடம் விஷயத்தை சொன்னதும் அவர்களால் நடந்ததை நம்பவே முடியவில்லை. அதன்பிறகு தாய் மற்றும் சேயை உடனடியாக மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சியெனா என பெயரிட்டுள்ளது இந்த தம்பதி.
இதுபற்றி பேசிய சியாரா," எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது. மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த காரில் எனது இரண்டாவது மகள் பிறந்தாள். இப்போது நாங்கள் இருவரும் நலமுடன் இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.