"துபாய்க்குனு சொல்லி ஏமாத்திட்டாங்க".. 20 வருஷமா அம்மாவை காண துடித்த மகள்.. எதேச்சையா யூட்யூபில் பார்த்த வீடியோவால் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்20 வருடங்களாக தனது தாய் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் தவித்து வந்த மகளின் தேடலுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
Also Read | விமானத்துக்கு கீழே வேகமாக சென்ற கார்.. கொஞ்ச நேரத்துல பதறிப்போன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!
வீட்டு வேலை
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை சேர்ந்தவர் ஹமீதா பானு. இவருக்கு யாஸ்மின் என்ற மகள் இருக்கிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு பயண முகவர் ஒருவர் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வேலைக்கு செல்ல முயற்சி செய்திருக்கிறார் ஹமீதா. திட்டமிட்டபடி அவரது பயணமும் அமைந்திருக்கிறது. வீட்டு வேலைக்கு என்று சொல்லி அவர் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் ஹமீதாவின் மகள் கடைசியாக தனது அம்மாவை பார்த்தது அப்போதுதான்.
சுமார் 20 வருடங்கள் கடந்த பின்னரும் தன்னுடைய அம்மா எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் தவித்து இருக்கிறார் யாஸ்மின். தனக்கு உதவி செய்யுமாறும் தன்னுடைய அம்மாவை மீட்டுக் கொடுக்கும் படியும் பலரிடம் யாஸ்மின் உதவி கேட்ட போதும் அவரால் அவருடைய அம்மாவை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது செல்போனை யாஸ்மின் உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது யூடியூப் பயன்படுத்திக் கொண்டிருந்த அவர் எதேச்சையாக ஒரு வீடியோவை பார்த்திருக்கிறார். அதில் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து வாழ்வதாக சொல்லவே யாஸ்மினால் தன்னுடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அது யாஸ்மினுடைய அம்மா ஹமீதா பானு தான்.
தேடலுக்கு கிடைத்த விடை
இதனை தொடர்ந்து அந்த யூட்யூப் சேனலை தொடர்புகொண்டு பேசியுள்ளார் யாஸ்மின். அப்போதுதான் அவர் பாகிஸ்தானில் உள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. தனது குடும்பத்தினை விட்டு துபாய்க்கு வீட்டு வேலைக்காக துபாய் சென்றதாகவும் அதன்பின்னர் பயண முகவர் தன்னை ஏமாற்றி பாகிஸ்தானுக்கு அழைத்து வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார் ஹமீதா.
அந்த யூட்யூப் சேனல் உரிமையாளர் அவருடைய வீடியோவை வெளியிட அதுவே தற்போது பல வருட தேடலுக்கு விடையாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய யாஸ்மின்,"20 வருடங்களாக எனது அம்மா எங்கே இருக்கிறார்? என்று தெரியாமலேயே இருந்தேன். இப்பொது யூட்யூப் மூலமாக அவர் இருக்கும் இடம் தெரியவந்திருக்கிறது. அவரை இந்தியா அழைத்துவர இந்திய அரசு உதவிபுரிய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்" என்றார். இது நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.