இரவில் உணவு ஆர்டர் செய்த பெண்.. பார்சலுடன் வந்த ஊழியர்.. "அடுத்த பத்து நிமிஷம் நடந்த விஷயம் தான் இன்னிக்கி செம TRENDING!!"
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் மூலம் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம், பலரது மத்தியில் பரவலாக உள்ளது.
அது மட்டுமில்லாமல், எப்போதும் வேலை என்று இயங்கும் பலரும் நேராக உணவகங்களுக்கு சென்று உண்டு நேரத்தை கழிப்பதை விட, தேவையான உணவை போன் மூலம் ஆர்டர் செய்தால் தங்களின் வீடு தேடி வந்து விடும் என்பதால் அதையே பலரும் தற்போது பின்பற்றி வருகிறார்கள்.
அந்த வகையில், பெரும்பாலும் ஆண்களே அதிகம் டெலிவரி ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், இளம் பெண் ஒருவர் கேஎஃப்சி டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் தொடர்பான கதை, தற்போது இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஃபிஸா இஜாஸ் என்ற பெண் ஒருவர், தனது லிங்க்டு இன் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் இரவு நேரத்தில், லாகூரிலுள்ள KFC நிறுவனத்தில் இருந்து, உணவை ஆர்டர் செய்திருந்தேன். அப்போது பெண் ஒருவர், என்னை அழைத்து நான் உங்கள் ஆர்டரை எடுத்துக் கொண்ட ஊழியர் என கூறினார். பெண் குரலைக் கேட்டதும் நான் அதிக உற்சாகம் அடைந்தேன். அவர் வீட்டிற்கு வரும் போது, நானும் எனது தோழிகளும் அந்த பெண் டெலிவரி ஊழியருக்காக காத்திருந்து 10 நிமிடங்கள் அவர் வந்த பின் உரையாடினோம்.
லாகூர் பகுதியை சேர்ந்த மீராப் என்ற அந்த பெண், பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். பகலில் மாணவியாகவும் இரவில் டெலிவரி ஊழியராகவும் பணியாற்றி, தனது கட்டணங்களை ஈடுகட்டி வருகிறார். படிப்பு முடித்த பின்னர், சொந்தமாக பேஷன் ப்ராண்ட் ஒன்றை தொடங்க உள்ளதால், படிப்பு முடியும் வரை அவர் டெலிவரி ஊழியராக பணிபுரிய உள்ளதாக எங்களிடம் தெரிவித்தார். இது போல இன்னும் நிறைய பாகிஸ்தான் பெண்கள், தங்களுக்கு விருப்பமான சாகசங்களில் ஈடுபடுவதை பார்க்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, அந்த இளம்பெண்ணின் கல்லூரி கட்டண செலவை KFC பவுண்டேஷன் பார்த்துக் கொண்டாலும், குடும்பத்தை பார்த்துக் கொள்ளவும், தனது படிப்பு தொடர்பான வேறு செலவுகளுக்கும் அவர் டெலிவரி ஊழியராக பணிபுரிவதாகவும் அந்த பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பகலில் மாணவியாக, இரவில் டெலிவரி ஊழியராக செயல்படும் இந்த இளம் பெண்ணுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதோடு, நிச்சயம் அவர் வாழ்வில் பெரிய உயரத்திற்கு செல்வார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "Tie கட்டுறத நிப்பாட்டுங்க.." வித்தியாசமாக ஐடியா கொடுத்த ஸ்பெயின் பிரதமர்.. எதுக்காக அப்டி பண்ண சொன்னாரு??