"ஆஹா, இந்த மாப்பிள்ளைய எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?!.." திருமணத்திற்கு பின் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!.. வெளியான 'பகீர்' மோசடி..
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசின் நலத்திட்ட உதவியைப் பெறுவதற்கு வேண்டி, இளைஞர் ஒருவர் செய்த மோசடி சம்பவம் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், முக்கிய மந்திரி சமுகிக் விவாஹ யோஜனா (Mukhya mantri Samuhik Vivaah Yojana) எனும் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் நடத்தி, நலத்திட்ட உதவிகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு, 35,000 ரூபாய் பணம் மற்றும் வங்கிக் கணக்கில் 20,000 உட்பட 10,000 ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துண்டலா என்னும் இடத்தில் வைத்து 51 தம்பதிகளுக்கு சமூக நலத்துறை திருமணத்தினை நடத்தி, நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளது. இதனையடுத்து, இந்த திருமண நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் அதிகம் வெளியான நிலையில், திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் கேடி வேலை அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டி, தனது சொந்த சகோதரியையே இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிய வந்தது. அந்த இளைஞரின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த தம்பதியரை அடையாளம் கண்டு கொண்ட நிலையில், மோசடி வெளியானது.
இது தொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் அந்த மணமகன் மீதும் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அவரது ஆதார் அட்டையையும் சோதித்து வருகின்றனர்.