ஓடும் பேருந்தில் 'காதல்' ஜோடி செய்த 'காரியம்'.. அதிர்ச்சியில் உறைந்த 'சக' பயணிகள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணான லோகேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரிய வரவே, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அந்த காதல் ஜோடி, வீட்டில் இருந்து கிளம்பி, பெங்களூர் சென்றுள்ளனர். அப்போது, சில நாட்கள் பெங்களூரில் தங்கிய ராஜேஷ் மற்றும் லோகேஸ்வரி ஆகியோர், சேலம் செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் வந்துள்ளனர்.
அப்போது, பேருந்து சேலம் அருகே வந்த போது, இருவரும் பேருந்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்ட சக பயணிகள், அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, காதல் ஜோடியை மீட்ட பயணிகள், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கருப்பூர் காவல்துறையினர், காதல் ஜோடியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
'நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். ஆனால், எங்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெங்களூர் கிளம்பிச் சென்று விட்டோம். அங்கே வேலை எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டோம். இதன்பிறகு, சேலம் வந்த நாங்கள், இனி இணைந்து வாழ முடியாது என்ற விரக்தியில், பேருந்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றோம்' என போலீசார் விசாரணையில் அவர்கள் தெரிவிதித்துள்ளனர்.
இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காதல் ஜோடிகள் மட்டுமில்லாமல், பலரும் தங்களது வாழ்க்கையில் ஏதேனும் சிறிய பிரச்சனைகள் வந்து விட்டால், வாழ்க்கையே இல்லை என்ற மாயையில், தற்கொலை என்ற விபரீத முடிவை எடுக்கின்றனர். அப்படி தவறான பாதையில் செல்லாமல், துன்பத்தில் இருந்து கடந்து வர நம் முன் இருக்கும் தீர்வை நோக்கி பயணித்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
தற்கொலை என்பது தவறான முடிவு. எந்த சூழலிலும் தற்கொலை குறித்து சிந்திக்கக்கூடாது. அப்படி ஒரு மனநிலை வந்தால் உடனே சினோகா என்ற தற்கொலை தடுப்பு அமைப்பின் 044 2464 0050 என்ற தொலைப்பேசி எண்ணில் அழைக்கலாம். அல்லது அரசின் உதவி எண்ணான 104 ஐ அழைக்கலாம்.