கிறிஸ்துமஸ் வேலையா சர்ச்சுக்கு போய்ட்டேன்.. மதியம் திரும்பி வந்தப்போ...! பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Gold, money robbery at house in Madurai, Police investigate Gold, money robbery at house in Madurai, Police investigate](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/gold-money-robbery-at-house-in-madurai-police-investigate.jpg)
மதுரை மாவட்டம் திருமங்கலம் கிறிஸ்டியன் காலனியை சேர்ந்தவர் திருமாவளவன். இவர் மாநில கூட்டுறவு வங்கியில் துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது ஓய்வு பெற்ற இவர், திருமங்கலம் தென்னிந்திய திருச்சபை அற்புதநாதர் ஆலயத்தின் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த சூழலில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கிறிஸ்மஸ் பண்டிகை தொடர்பான வேலைகளை கவனிப்பதற்காக அற்புதநாதர் ஆலயத்திற்கு சென்று உள்ளார். இதனை அடுத்து மதியம் வீடு திரும்பியபோது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திருமாவளவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே வேகமாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 65 சவரன் நகைகள், வைர நெக்லஸ், பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)