"மொத்தமா 4,300 கால்தடங்கள்.." 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள்??.. உலகையே புரட்டி போட்ட ஆய்வு முடிவு
முகப்பு > செய்திகள் > உலகம்பரந்து விரிந்து கிடக்கும் இந்த பூமியில், நமக்கு தெரியாத பலவிதமான கண்டுபிடிப்புகள் கூட அவ்வபோது ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்தி வரும்.
Also Read | "ஒருத்தர் பேர கேட்டா.. அதோட வாசனை தோணும்.." மிக அரிய Syndrome.. அவதிப்படும் இளைஞர்..
அந்த வகையில், தற்போது டைனோசர் உயிரினம் குறித்து வெளியாகி உள்ள தகவல் ஒன்று, பலரையும் மிரண்டு போகச் செய்துள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் என்னும் மிகப்பெரிய உயிரினம் ஒன்று வாழ்ந்து வந்ததாக பல்வேறு ஆய்வுகள் தகவல்கள் தெரிவிக்கிறது. அவ்வப்போது, சில ஆய்வு முடிவுகளும் இந்த பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர் உயிர் வாழ்வதை நிரூபிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது டைனோசர் தொடர்பான கண்டுபிடிப்பு ஒன்று, சீனாவில் நடைபெற்றுள்ளது. வடக்கு சீனாவின் Hebei மாகாணத்தில் உள்ள Zhangjiakou என்னும் பகுதியில், 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் 4300 கால் தடங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசரின் இந்த கால்தடங்கள் மூலம், டைனோசர் எப்படி நடந்தது, எந்த அளவுக்கு நீளமாக இருந்தது, அதன் எடை மற்றும் அளவு, நடக்கும் வேகம் உள்ளிட்ட விஷயங்களையும் விஞ்ஞானிகள் இதன் மூலம் அறிவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டைனோசரின் கால் தடங்கள், அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தை உள்ளிட்டவற்றுடன், டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கும், அந்த வாழ்க்கை சூழலுக்கும் இடையேயான உறவு குறித்தும் விளக்குகிறது. அதே போல, இந்த கால் தடங்கள் மூலம், டைனோசர் வாழ்ந்த காலத்தில் தொடர்பான ஏராளமான விஷயங்களும் தெரிய வருவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக, சுமார் 900 ஸ்கொயர் மீட்டர் தூரத்தில் இந்த 4300 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கால் தடங்கள், நான்கு வெவ்வேறு டைனோசர் இனங்கள் தொடர்பானது என்றும், இந்த கால் தடங்கள் தாவர உண்ணி வகைகள் மற்றும் மாமிச உண்ணி என இரண்டையும் கலந்த வகையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, முழுவதும் நீர் மற்றும் மரங்கள் நிரம்பி இருந்ததால், இந்த பகுதி டைனோசர்களுக்கு மிகவும் பிடித்தமான பகுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதி, தற்போது மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இது தொடர்பாக விஞ்ஞானிகள், ஆய்வுகளையும் மேற்கொண்டு பல்வேறு வினோதமான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Also Read | "மாசம் 50 ஆயிரம் தான் சம்பளம், ஆனா.." அரசு ஊழியர் வீட்டை திறந்ததும்.. அரண்டு போன அதிகாரிகள்