"அட கொஞ்சம் அமைதியா இருங்கப்பா..." 'நீங்க வேற' சூழ்நிலை புரியாம 'ஆரம்பிக்காதிங்க...' 'போராட்டக்காரர்களிடம்' கெஞ்சும் 'பிரதமர்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் மின்னிபோலிஸ் நகரில் கடந்த வாரம் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வன்முறைப் போராட்டங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 25 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் தணியவில்லை.
அமெரிக்கா மட்டுமல்லாமல் பிரிட்டன், கனடா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தற்போது இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் இன்று ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் இனவெறி பிரச்சினைகள் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், போலீஸ் வன்முறைக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு ஆதரவாகவும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு போராட்டங்களை கைவிட பரிசீலிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடினால் கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து மிக அதிகம்.
பூர்வகுடிகள் உட்பட மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலியர்கள் மிகக்கடுமையாக உழைத்து பெரும் தியாகங்களை செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். ஆகவே, போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என ஆஸ்திரேலிய மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
