'எங்கள நீயே கொன்னுடுப்பா, வேற வழி இல்ல...' 'அப்பா,அம்மா சம்மதத்தோட...' 'அதிகாலையில தலைகாணிய எடுத்து...' நெஞ்சை உலுக்கும் நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் மகனே தன் தாய் தந்தையை அவர்களது விருப்பத்துடன் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதியில் ஆடிட்டர் வேலை செய்யும் 35 வயதான சந்தோஷ் அவரின் தந்தை நரசிம்ஹா ராஜு (70) மற்றும் தாய் சரஸ்வதி (64) வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை காவேரி ஆற்றில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தன் நண்பர் ஸ்ரீரங்கபட்னாவிடம் அறிவித்து, காவிரி ஆற்றில் குதித்த அவர் தவறுதலாக ஒரு பாறையில் இறங்கி அவரது இரண்டு கால்களையும் முறித்துக் கொண்டார். சந்தோஷ் நண்பர் போலீசாரிடம் அளித்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் சந்தோஷை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போதுதான் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் வெளியே வந்தது.
விசாரணையில், சந்தோஷ் ஆடிட்டராக பணிபுரியும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலேயே, தான் சேமித்து வைத்திருந்த ரூ25 லட்சம் பணத்தைக் கொண்டு ஒரு பிளாட் வாங்க நினைத்துள்ளார். தான் சேமித்து வைத்திருந்த எல்லா பணத்தையும் தன் நிறுவனத்திடம் அளித்துள்ளார்.
இந்நிலையில் தான் சந்தோஷ் இதுவரை செய்த ஆடிட்டிங்கில் தங்களது நிறுவனத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதால் அதற்கான பெரும் தொகையை இழப்பிடாக கேட்டுள்ளது அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.
என்ன செய்வதென்று தெரியாத சந்தோஷ் தன் தந்தையிடம் உதவி கேட்டு சென்றுள்ளார். ஆனால் அவரிடமும் பணம் இல்லாத காரணத்தால் குடும்பமே நிர்கதியில் இருந்துள்ளது. எந்த உதவியும் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என சந்தோஷ் தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட சந்தோஷின் பெற்றோர் நீ தற்கொலை செய்வதற்கு முன்பு எங்களை உன் கையாலேயே கொன்றுவிடும் படி கூறியுள்ளனர். வேறு வழியின்றி தன் சொந்த அம்மா அப்பாவை அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு தன் பெற்றோரின் அறைக்குச் சென்று தலையணையைப் பயன்படுத்தி அவர்களை மூச்சுத்திணறச் செய்து கொன்றதாகவும், பிறகு தான் தற்கொலை செய்து கொள்ள காவேரி ஆற்றிற்கு சென்றதாகவும் சந்தோஷ் போலீசாரிடம் தெரிவித்தார்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
