வைரலாகும் ‘பாட்டில் மூடி சேலஞ்ச்’.. இணையத்தைக் கலக்கும் வீடியோக்கள்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jul 03, 2019 11:00 AM

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஃபிட்னஸ் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் வரிசையில் ‘பாட்டில் மூடி’ என்ற புதிய சவால் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

watch video new Bottle cap challenge goes viral

கஜகஸ்தானைச் சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்புக் கலை வீரர் பராபி டாவ்லட்சின் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவர் தண்ணீர் பாட்டிலைப் பிடித்திருக்க ‘பேக் கிக்’ முறையில் பராபி அடுத்தடுத்து வலது, இடது காலால் எட்டி உதைக்கிறார். அப்போது பாட்டிலின் மூடி மட்டும் தனியாக சுழன்று தெறித்துப் பறக்கிறது. இந்த சாகசத்தை வேறு யாராவது செய்ய முடியுமா என அவர் சவால் விடுக்க, தற்போது வைரலாகி வருகிறது இந்த ‘பாட்டில் மூடி’ சவால்.

டிரான்ஸ்போர்ட்டர் ஹாலிவுட் படம் மூலம் பிரபலமான ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்ஸ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ‘பாட்டில் மூடி’ சவாலை செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘பேக் கிக்’ செய்து பாட்டில் மூடியைத் திறக்கும் இந்த சவாலை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மூடி திறக்காமல் பாட்டில் பறக்கும் வீடியோக்களும் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

New Challenge with #farakickschallenge 😉! Sending a challenge @jasonstatham @thenotoriousmma @jcvd @jackiechan . Waiting for you video friends .🥋🔥 ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ ⠀ #bottlecapchallenge #farakicks #farakickschallenge #mixedmartialarts #tkd #taekwondowtf #taekwondo #fighter #sidekick #trainning #jeetkunedo #jump #kungfu #kicks #taekwondoitf #каратэ #ткд #martialarts #태권도 #challenge #karate #kickboxer #kickboxing #farakicks #martialartist #blackbelt

A post shared by Master Fa (@farakicks) on

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : #BOTTLECAPCHALLENGE #VIRALVIDEOS