'25 வருசத்துக்கு முன்பு இறந்த தந்தையை'...தற்போது 'அடக்கம் செய்த மகன்'...நெகிழ வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 10, 2019 03:33 PM

25 வருடங்களுக்கு முன்பு இறந்த தனது தந்தையினை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்துள்ள மகனின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

25 years after death, his remains are sent for burial in war-free Lank

இலங்கை, யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜார்ஜ்.குடும்பத்தில் நிலவிய பொருளாதார சூழ்நிலை காரணமாக இத்தாலியில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது கடந்த 1994-ம் ஆண்டு மே மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அப்போது ஸ்டீபனிற்கு வயது 49.அந்த காலகட்டத்தில் இலங்கையில் பயங்கரமாக போர் நடைபெற்று கொண்டிருந்தது.இதனால் ஸ்டீபனின் உடலை சொந்த ஊரான இலங்கைக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் இத்தாலியில் வசித்து வந்த ஸ்டீபனின் நெருக்கிய உறவினர்கள் சிலர்,அவரின் உடலை பதப்படுத்த முடிவெடுத்தனர்.இதனையடுத்து இத்தாலி அரசின் அனுமதியுடன், ஸ்டீபனின் உடலை 25 ஆண்டுகளுக்கு உடல் பாதுகாப்பாக இருக்கும்படி பதப்படுத்தி வைத்தனர். இலங்கையில் போர் பதற்றம் நீடித்ததால் இந்த விஷயத்தை ஸ்டீபனின் குடும்பத்துக்கு தெரிவிக்க இயலவில்லை.இதனிடையே இலங்கைப் போர் 2009-ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது.இருப்பினும் ஸ்டீபனின் குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல் மற்றும் சட்ட நடைமுறைகளால் அவரின் உடலை சொந்த மண்ணிற்கு கொண்டு வருவதை பற்றி அவரது மனைவியால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.

இந்த சூழ்நிலையில் இந்த மாதத்தோடு 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஸ்டீபனின் உடல் நேற்று முன்தினம் (08/04/2019) அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. உறவினர்கள் அஞ்சலிசெலுத்திய பின்னர்,  ஸ்டீபனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இது தொடர்பாக ஸ்டீபனின் மகன் ஜூட்சன் பேசுகையில் ''எனது அப்பா இறந்த நேரத்தில் இங்கு கடுமையாக போர் நடந்து வந்ததால் அப்பாவின் உடலை இங்கு கொண்டு வர முடியவில்லை. நாங்களும் அவருக்கு இங்கு இறுதி சடங்குகளை செய்துவிட்டோம். பின்பு தான் மாமா ஒருவர் அப்பாவின் உடலை பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.

ஆனாலும் உடனே அப்பாவின் உடலை கொண்டு வர போதிய பண வசதி இல்லை. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு லண்டலில் நல்ல வேலை ஒன்று கிடைத்தது.இதனையடுத்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து,25 வருடங்களுக்கு பின்பு அப்பாவின் உடலை எங்களது சொந்த மண்ணில் அடக்கம் செய்துள்ளோம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் சொந்த மண்ணில் தான் அப்பாவை அடக்கம் செய்ய வேண்டும் என்ற எனது அம்மாவின் ஆசையையும் நிறைவேற்றி விட்டேன்'' என ஜூட்சன் தெரிவித்தார்.

25 வருடங்களுக்கு பின்பு தனது குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடலை அடக்கம் செய்தது என்பது நிச்சயம் ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வே.

Tags : #SRILANKA #BURIAL #ITALY #CHAVAKACHCHERI