பூமியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது சொத்தில் பங்கு.. உலக கோடீஸ்வரர்களையே திகைக்க வைத்த வாரன் பஃபெட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல முதலீட்டாளருமான வாரன் பஃபெட் தனது 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தை உலகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பகிர்ந்து அளிக்க இருக்கிறார்.
Also Read | 24 மணிநேரத்துல அடுத்தடுத்து 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..கடும் அச்சத்தில் அந்தமான் மக்கள்..!
வாரன் பஃபெட்
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபருமான வாரன் பஃபெட், 'பெர்க்சயர் ஹாத்வே' என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். பங்குச் சந்தை முதலீட்டின் பல்வேறு நுணுக்கமான தகவல்களை கண்டறிந்து அவற்றின் மூலம் உலக பணக்காரர் என்ற அளவிற்கு உயர்ந்தவர் தான் இந்த வாரன் பஃபெட். கடந்த ஜூன் மாத நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர் ஆகும். உலகின் 5ஆவது பெரிய செல்வந்தராக இவர் அறியப்படுகிறார்.
சொத்து
வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் வாரன் பஃபெட்-ற்கு 92 வயது பூர்த்தியடைய இருக்கிறது. தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னுடைய 85 சதவீத சொத்துக்கள் தானமாக அளிக்கப்படும் என அறிவித்து உலக பணக்காரர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு இந்த சதவீதத்தினை 99 ஆக உயர்த்தினார் வாரன். இந்த சொத்துக்கள் உலகம் முழுவதிலும் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை
தற்போது பெர்க்ஷைர் நிறுவனத்தில் வாரன் பஃபெட் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 56 பில்லியன் டாலர் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 17.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வாரன் பஃபெட்-ன் குடும்பத்தினருக்கு சொந்தமான 4 அறக்கட்டளைக்கு வழங்கப்பட இருக்கிறது. இது தவிர 18.7 பில்லியன் டாலர் பணம் எதற்கும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
10 ஆண்டுகளுக்குள்
இதனிடையே தானமாக வழங்கப்பட இருக்கும் இந்த சொத்துகள், தான் இறந்த 10 ஆண்டுகளுக்குள் உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வாரன் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்காக இந்த தொகையை செலவிடுவது குறித்து பில் கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சர்வதேச குழந்தைகள் வங்கி ஒன்றினை துவங்கி, அதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதார செலவுகளுக்கு இந்த தொகையை செலவழிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
தான் இறந்த பிறகும், தன்னுடைய சொத்துகளை தான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும்படி வாரன் பஃபெட் தெரிவித்திருப்பது உலக பணக்காரர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.