‘ஒருவழியா வந்து சேந்துட்டார்!’.. ‘உலகின் 4வது பெரும் பணக்காரர்..’ ..‘ஆனா இவரே இப்பதான்’.. ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Feb 26, 2020 07:58 AM

உலகின் 4வது பெரிய பணக்காரர் தற்போதுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி உள்ளார் என்கிற ஆச்சர்ய தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது.

warren buffett switches to Iphone 11 , smartphone

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமானவர் வாரன் பப்பெட். ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளிலும் பங்குதாரராக இருக்கும் இவர், உலகின் நான்காவது பெரும் பணக்காரர்.  ஆனால் இவர் சாம்சங் நிறுவனத்தின் பழைய பிளிப் மாடல் செல்போனையே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் இந்நிலையில் தற்போதுதான் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அவர் நகர்ந்துள்ளார் என்பதும் ஆச்சரிய தகவல்களாக பரவி வருகின்றன.

ஆப்பிள் ஐபோனை பொருத்தவரை மாடல் 11-ஐ தற்போது பயன்படுத்தி வரும் வாரன் பப்பெட், போன் செய் செய்வதற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வரும் நிலையில், பங்குச் சந்தை நிலவரங்களை தெரிந்துகொள்ள தனியாக ஐபேட் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். எனினும் உலகின் பலரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு இப்போதுதான் அவர் வந்து சேர்ந்துள்ளார் என்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், சீனா தொடங்கி எங்கும் தனது முதலீட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் கிரிப்டோ கரன்ஸி முதலீட்டால் எவ்வித லாபமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

Tags : #WARREN BUFFETT