'சாப்பாட்டுக்கு கூட வழியியல்ல...' 'கையில 2 மாச கைக்குழந்தை வேற...' 'பார், ஹோட்டல் ஓனர்கிட்ட பேசிய டீல்...' - பதறிப்போன கணவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவருடன் ஏற்பட்ட சண்டையால் பெண்மணி ஒருவர் தன் 2 மாத ஆண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் கான்பூரில் வசித்து வருபவர் ஸ்க் சோயா கான் என்னும் பெண்மணி. இவரின் கணவர் அப்துல் முஜாஹத். இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, முஜாஹத் தனது மனைவி சோயாவுடன் சண்டையிட்டு தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். எவ்வளவு சமாதானம் செய்தும் கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை. குழந்தையை பராமரிப்பதற்கும், சாப்பாட்டிற்கும் கூட பணம் ஏதும் இல்லாமல் தனியாக ஒரு வார காலம் திண்டாடியுள்ளார் சோயா.
அதையடுத்து ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தும் முடிவிற்கு வந்த ஸ்க் சோயா, தன் இரண்டு மாத குழந்தையை ரூ. 45,000 ரூபாய்க்கு நம்பள்ளியின் சுபான்புராவில் உள்ள தாருவாலா பார் மற்றும் உணவகத்தின் மேலாளரான ஸ்க் முகமது மற்றும் தபஸ்ஸம் பேகம் ஆகியோருக்கு விற்றுள்ளார்.
அதையடுத்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி, வீடு திரும்பிய அப்துல் முஜாஹத் குழந்தை எங்கே என கேட்டதற்கு குழந்தையை விற்றுவிட்டதாக கூறியுள்ளார் ஸ்க் சோயா. உடனடியாக ஹபீப் நகர் காவல் நிலையத்தை அணுகி, தனது மனைவி தங்கள் குழந்தையை விற்றதாகக் கூறி புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தாய் ஸ்க் சோயா கானை காவலில் எடுத்து விசாரிக்கையில், குழந்தை விற்ற காரணத்தை கூறி அழுதுள்ளார். மேலும் குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட ஆயிஷா ஜபீன், ஷமீம் பேகம், ஷமீமின் சகோதரி சிராஜ் பேகம் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதையடுத்து ஸ்க் முகமது மற்றும் தபஸ்ஸம் பேகம் தம்பதிகளிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
